2671.
|
வெந்தழல்
வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
2 |
2672.
|
பண்ணிற்
பொலிந்த வீணையர்
பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 3
|
2.
பொ-ரை: தழல் போன்ற திருமேனியராய், திருநீறுபூசி,
விரித்தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக்
கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று
பலியேற்பவர். செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை
புகுந்து எனக்கு அருளை நல்கி ப்புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு
செய்யுமாறு வருவார் காணீர்.
கு-ரை:
இறைவர் என் சிந்தனையுட்புகுந்து எனக்கு அருள் நல்கித்
தன்னைப் பரவச் செய்ய வருவார் காணீர் என்க.
3.
பொ-ரை: பண்ணிசை பொருந்திய வீனைய உடையவர்.
பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு
விளங்கும் திருமிடற்றை உடையவர். திருநீற்றுச் சுண்ணம் அணிந்த
மார்பினர். அழகிய சடைமீது இளம்பிறை சூடியவர். வாய்மூரில்
விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர்.
கு-ரை:
பண்-பண்ணிசை, வீணையர்- (பா.8 பார்க்க)
|