2673.
|
எரிகிளர்
மதியமொ டெழினுதன்மேல்
எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி
வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
4 |
2674.
|
அஞ்சன
மணிவணம் எழில்நிறமா
வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க |
பதினெகணம்-பதினெட்டுத்
தேவர்கூட்டம் நஞ்சு உண்ணப் பொலிந்த
மிடற்றினார், நஞ்சு உண்டும் சாவா ஒருவன் என்ற கருத்தை உணர்த்திற்று.
உள்ளம் உருகில் உடனாவர் என்னும் பரமாப்த வசனத்தைத்
திருவுந்தியாரில் (7) அமைத்து, உள்ளம் உருகில் உடனாவர் அல்லது
தெள்ள அரியர் என்று உந்தீபற, சிற்பரச் செல்வர் என்று உந்தீபற.
என்றருளியது காண்க. சுண்ணம் - சுவர்ணம், திருநீற்றுப் பொற்சுண்ணம்.
பொன்போலச் சுடருஞ் சடை.
4.
பொ-ரை: சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும்
பிறை
மதியையும், அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும், கங்கையையும்
அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர்.
திருநீறணிந்த மார்பினர். சத்திய வடிவினர். வாய்மூரில் விளங்கும்
அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வருவார். காணீர்.
கு-ரை:
பொறி-படப்பொறி. அகலம்-மார்பு. (பா.7.) வாய்மையர்-
சத்தியரூபர். வாய்மையரூர். என்பதன் மரூஉவே வாய்மூர். அரவு அரைக்கு
அசைத்து வருவார் இவர் காணீர் என்க.
5.
பொ-ரை: நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி
வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும்
கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறு
|