|
வெஞ்சின
மால்களி யானையின்தோல்
வெருவுறப் போர்த்ததநிறமு மஃதே
வஞ்சனை வடிவினொ டிவராணீர்
வாய்மூரடிகள் வருவாரே.
5 |
2675.
|
அல்லிய
மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச்
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 6
|
நுதலை உடைய உமையம்மை
நடுங்க யானையின் தோலைக் கண்டோர்
அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின்
மனம் கவர வஞ்சனைவடிவோடு வருவார். அவரைக் காணீர்.
கு-ரை:
நீலமணிபோலும் மேனியர். அஞ்சனம்-கருநிறம்,
மணிவண்ணம்போலும் அழகிய நிறம். அகம் மிடறு-கழுத்திடம்.
திமிலம்-பேரொலி.
6.
பொ-ரை: அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய
விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில்
எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவு தலை ஏற்றருளுபவர்.
வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து
புலித்தோலுடுத்துவருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர்.
கு-ரை:
இதன் முதலீரடியொடும் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்தவான
வாழ்க்கையது உடையார். (தி.2 ப.94 பா.7) என்பதைப் பொருத்திக் காண்க.
மகா சங்கார தாண்டவத்தைப்
பல்வேறு கூறுபாடுற்ற சத்திகள்
ஒருங்குசேர்ந்து காணும் உண்மை உணர்த்திற்று. வல்லியம்-புலி.
|