2676.
|
கடிபடு
கொன்றைநன் மலர்திகழுங்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 7 |
2677.
|
கட்டிணை
புதுமலர்க் கமழ்கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
இறைவனா ருறைவதொர் இடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 8 |
7.
பொ-ரை: மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத்
தலையில் அணிந்தவர். தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழு
மணிகளின் ஒளி சிதறும் திருவடியினர். வீதிகளில் பெண்கள் பலியிடலைக்
கண்டு முறுவல் செய்பவர். திருநீறு அணிந்த வடிவோடும், பொன்போல்
மிளிரும் பாம்பணிந்த மார்போடும், கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர்
இறைவர் வருவார். காணீர்.
கு-ரை:
கண்ணியர்-தலையிற்சூடும் மாலையர், மணிமுடி பில்கும்-
(ஒளி) சிதறும், (பா.4.) பொடி. திருநீறு. வடி-கூர்மை.
8.
பொ-ரை: இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை
மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். வீணை வாசிப்பவர். அவ்விறைவர்
சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும்.
பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை
மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய்மூர் இறைவராகிய
அப்பெருமானார் வருவார். காணீர்.
கு-ரை:
கட்டிணை புதுமலர்-இணை இணையாகக்
|