2678.
|
ஏனருப்பினொ
டெழிலாமை
யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற
கள்வர் கனவிற் றுயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.
9 |
2679.
|
சூடல்வெண்
பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 10
|
கட்டப்படும் புதிய
பூக்கள். எட்டுணை- (எண் + துணை) எண் மடங்கு.
பட்டு இணைந்த-பட்டிசைந்தபாவையர்-தாருகவனத்து மகளிர். வட்டணை-
வட்டம். தாளம் போடுதலுமாம்.
9. பொ-ரை: பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும்
அணிந்து
எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம்
உள்ளங்களைக் கவரும் கள்வராவர். கனவிடைத் தோன்றி நமக்குத் துயர்
விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது
பிறையணிந்து அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
கு-ரை:
ஏனம்-பன்றி. மருப்பு-கொம்பு, பன்றிக்கொம்பும்
ஆமையோடும் பூண்டவர் என்று திருமுறைகளில் பல இடங்களில்
இருத்தல் வெளிப்படை.
10.
பொ-ரை:
பிறைசூடியவராய், சுடர்முடியவராய், திருநீறு
பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றைமாலை சூடியவராய், பாம்பும்
முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த
|