2680.
|
திங்களொ
டருவரைப் பொழிற்சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொ டருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுல்குக்கோர் தவநெறியே. 11
|
திருச்சிற்றம்பலம்
கையினராகி,
தாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு
பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
கு-ரை:
பசைந்து-பற்றி, பசுமையுற்று, கோடல்-வெண் காந்தள்,
ஈண்டுக் காந்தளையுணர்த்தி, மகளிர் செவ்விரல்களுக்கு ஒப்பாயிற்று.
முகிழ்-அரும்பு.
11.
பொ-ரை: சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும்
சோலைகளையும் உடையதிருவாய்மூரிலுள்ள, வேதங்கள், வேதாங்கங்கள்
ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடிகளைப் பரவி
நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய
மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறி, உலகில் மேலான
தவநெறியாகும்.
கு-ரை:
வரைப்பொழில்-மலையிலுள்ள சோலைகள். மறையொலி-
வேதமுழக்கம். நங்கள் தம்வினை. எழுவார் நெறி, எழுவார்க்குத் தமர்நெறி,
உலகுக்கு ஒரு தவநெறி.
திருஞானசம்பந்தர்
புராணம்
நீடுசீர்த்
திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப்
பாடுசொற் பதிகந் தன்னாற் பரவிஅப் பதியில் வைகிக்
கூடுமெய் அன்பு பொங்க இருவருங் கூடி மீண்டு
தேடுமா மறைகள் கண்டார் திருமறைக் காடு சேர்ந்தார்.
-சேக்கிழார்.
|
|