பதிக
வரலாறு:
திருவிராமேச்சுரத்திலிருந்து
திருக்கேதீச்சரத்தை நினைந்து
போற்றிய ஞானச்செல்வர் வடதிசைமேற் செல்வாராய், பல சிவதலம்
பணிந்து, கடற்கரை வாய் தவிரப் போந்து, திருவாடானை சேர்ந்து
சாத்திய செந்தமிழ்மாலை இத்திருப்பதிகம்.
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
248 |
|
பதிக
எண்: 112 |
திருச்சிற்றம்பலம்
2681.
|
மாதோர்கூறுகந்
தேறதேறிய
ஆதியானுறை யாடானை
போதினாற்புனைந் தேத்துவார்தமை
வாதியாவினை மாயுமே. 1
|
2682.
|
வாடல்வெண்டலை
யங்கையேந்திநின்
றாடலானுறை யாடானை
தோடுலாமலர் தூவிக்கைதொழ
வீடுநுங்கள் வினைகளே. 2
|
1.
பொ-ரை: அம்பிகையை ஒருபாகமாக உகந்து கொண்டு
விடைமேல் ஏறியருளும் முதல்வன் எழுந்தருளிய திருவாடானையை
அடைந்து அவ்விறைவனை மலர்களால் அலங்கரித்தும் அர்ச்சித்தும்
வழிபடுபவர்களின் வினைகள் அவர்களை வருத்தமாட்டாதனவாய்
மாய்ந்துவிடும்.
கு-ரை:
அம்பிகைபாகனாகி விடைமேலேறியருளும் முதல்வன்
திருவாடானையைப் போது (அரும்பு, பூக்)களால் அலங்காரமும்
அருச்சனையும் புரிந்து பூசிப்பவரை வினைகள் வருத்த மாட்டாதனவாய்
மாய்ந்துவிடும். இப்பதிகமுழுதும் அருச்சனையின் பயன்
உணர்த்தப்பட்டமை அறிக.
2.
பொ-ரை: உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி நின்று
ஆடுதலை உடைய சிவபிரானது திருவாடானையை அடைந்து அவ்
|