பக்கம் எண் :

1100

2683.



மங்கைகூறினன் மான்மறியுடை
அங்கையானுறை யாடானை
தங்கையாற்றொழு தேத்தவல்லவர்
மங்குநோய்பிணி மாயுமே.          3
2684.



சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை
அண்ணலானுறை யாடானை
வண்ணமாமலர் தூவிக்கைதொழ
எண்ணுவாரிட ரேகுமே.            4


விறைவனை மலர்தூவித் தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும்.

     கு-ரை: வற்றிய பிரமகபாலத்தையேந்தி நின்று ஆடுதலையுடைய
சிவபிரான் ஆடானையை மலர்தூவித் தொழுதால் வினைகள் அழியும்.
தோடு-பூவிதழ்.

     3. பொ-ரை: மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில்
ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து
அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின்
நோய்கள் கெடும் பிணிகள் (வினைகள் மாயும்).

     கு-ரை: மங்கைபங்கன், மான்கன்றேந்திய திருக்கரத்தன்.
ஆடானையைத் தம்கைகளால் தொழுது ஏத்தவல்லவர் நோயும் பிணியும்
மாயும். மங்குதல்-கெடுதல்.

     4. பொ-ரை: சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த மார்பில்
பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவுளாகிய
சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து, அவ்விறைவனை அழகும்
மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர்
ஏகும்.

     கு-ரை: தோல்-மான்றோல் பூணுநூலொடு சேர்த்துத் தரித்துக்
கொள்வது. (தி.1 ப.28 பா.2; தி.1 ப.133 பா.4; தி.1 ப.80 பா9; தி.1 ப.6 பா.3.)
வண்ணம்-அழகு. எண்ணுவார்-தியானம்புரிவார். (பா.8.)