பக்கம் எண் :

1101

2685.



கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய
ஐயன்மேவிய வாடானை
கையணிம்மல ரால்வணங்கிட
வெய்யவல்வினை வீடுமே.            5
   
2686.



வானிளம்மதி மல்குவார்சடை
ஆனஞ்சாடல னாடானை
தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த
ஊனமுள்ள வொழியுமே.             6
   
2687.



துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை
அலங்கலானுறை யாடானை
நலங்கொண்மாமலர் தூவிநாடொறும்
வலங்கொள்வார்வினை மாயுமே.       7


     5. பொ-ரை: கொய்யப் பெற்றதும் அழகியதுமாகிய கொன்றை மலர்
மாலையைச் சூடிய தலைவன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து
அவ்விறைவனைக் கைகளால் மலர்தூவித்தொழுது வணங்குபவர்களின்
கொடிய வல்வினைகள் அவர்களை விட்டொழியும்.

     கு.ரை: கொய்-கொய்த, ஐயன்-தலைவன், பிதா. தலந்தொறும்
கைநிறையப் பூக்களைக்கொண்டு தூவிவழிபடுவது சைவர்க்குரிய
நன்னெறியாதலைப் பெரியபுராணத்துட்காண்க.

     6. பொ-ரை: வானில் விளங்கும் இளம்பிறையைத் தமது திருமுடியில்
சூடியவரும் நீண்ட சடைமுடியை உடையவரும், பஞ்ச கௌவியத்தை
விரும்பி ஆடுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய திரு ஆடானையை
அடைந்து அவ்விறைவர் திருவடிகளில் தேன் பொருந்திய அழகிய
மலர்களைச் சேர்ப்பவர்களின் முன் வினைகளாக உள்ளனயாவும் ஒழியும்.

     கு-ரை: பிறைமல்கு நீள்சடை, பஞ்சகௌவியம், அஞ்சு-ஐந்து. போலி,
அணிமலர் சேர்த்தலால் பழவினை பற்றறும். ‘உள்ளத்தே புகுந்தளிப்பவன்
ஊனம் எலாம் ஓட’.

     7. பொ-ரை; விளங்குகின்ற வெண்மழுவைக் கையில் ஏந்தி, சுற்றிய
சடைமுடிமீது கொன்றை வில்வமாலைகளை அணிந்துள்ள 148