2688.
|
வெந்தநீறணி
மார்பிற்றோல்புனை
அந்தமில்லவ னாடானை
கந்தமாமலர் தூவிக்கைதொழும்
சிந்தையார்வினை தேயுமே. 8
|
2689.
|
மறைவலாரொடு
வானவர்தொழு
தறையுந்தண்புன லாடானை
உறையும்ஈசனை யேத்தத்தீவினை
பறையுநல்வினை பற்றுமே. 9 |
சிவபெருமான் உறையும்
திருவாடானையை அடைந்து அவ்விறைவனை
அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும்
அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும்.
கு-ரை:
சடையசைதலையும் ஒளிர்தலையும் மாலையையும் கூறலாம்.
நலம்-அழகு. வலங்கொள்ளல் வழிபாட்டின் உறுப்புக்களுள் ஒன்று.
8. பொ-ரை:
தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின்
கண் மான்தோலை அணிந்தவரும், தோற்றக் கேடு இல்லாதவருமான
சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை
மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள்
தேயும்.
கு-ரை:
பா.4, பார்க்க. ஆதியும் அந்தமும் இல்லா அரும்
பெருஞ்சோதி சிந்தையார் வினை-சிந்தனை உடையவரது வினை.
9.
பொ-ரை: வேதங்களில் வல்ல அந்தணர்களோடு
விண்ணில்
உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திருவாடானையில்
உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும். நல்வினைகள் வந்துசேரும்.
கு-ரை:
வலார்-வல்லவர்; பூசுரர். வானவர்-சுரர். ஆடானையில்
எழுந்தருளும் உடையவனை, பறையும்-அழியும், பறைவது தீவினை.
பற்றுவது நல்வினை.
|