பதிக
வரலாறு:
137ஆவது பதிகத்
தலைப்பைக் காண்க.
பண்:
செவ்வழி
ப.தொ.எண்: 249
பதிக எண்: 113
திருச்சிற்றம்பலம்
2692.
|
பொடியிலங்குந்
திருமேனி
யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க
ஆடும் மடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம்
மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத்
தலைக்குங்கடற் காழியே. 1 |
2693.
|
மயலிலங்குந்
துயர்மா
சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய
நின்றவ் வடிகள்ளிடம் |
1. பொ-ரை:
திருநீறணிந்த திருமேனியர். புலித்தோல் உடுத்தவர்.
திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர். அவர் உறையுமிடம்,
இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக்களை
மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும்.
கு-ரை:
இலங்கும்-விளங்கும். கடல் அலையொலி இடி யொலி
போலுள்ளதாம். கடி-விரைவு, மிகுதி. அடிகள் இடம் கடற்காழி என்றவாறே
மேலும் இயைத்துக் கொள்க.
2. பொ-ரை:
மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க
எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணிசெய்ய
நின்ற சிவபிரான் உறையுமிடம், மேகம் போல வரையாது கொடுக்கும்
கொடையாளர்களுடன் தேவதஒலிபரவும் சிறப்பினதாய, கயல்மீன்கள்
தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும்.
|