|
புயலிலங்குங்
கொடையாளர்
வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி
சூழுங்கடற் காழியே. 2 |
|
|
2694.
|
கூர்விளங்குந்
திரிசூல
வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு
கந்தமண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரை
கள்மோதந் நெடுந்தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந்
தொழுகுங்கடற் காழியே. 3 |
|
|
2695.
|
குற்றமில்லார்
குறைபாடு
செய்வார் பழிதீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன்
னுயர்த்த பெருமானிடம் |
கு-ரை:
துயர்மாசு-உம்மைத்தொகை. கைம்மாறு வேண்டாக்
கடப்பாடுமாரி மாட்டு என் ஆற்றுங்கொல்லோ உலகு (குறள். 211.)
கொடையாளர்-அந்தணர்.
3. பொ-ரை:
கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர். குழையணிந்த
செவியினர். மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர்.
அவருக்குரிய ஊர், மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப்
பதியாகும்.
கு-ரை:
திரிசூலமாகிவேலுடையவர், மார்வு-மார்பு. உகந்த மணவாளன்.
விலங்கல்-மலை. தாரை-நீரொழுக்கு, பெருமழை.
4. பொ-ரை:
குற்றம் இல்லாதவர். தம் குறைகளைக் கூறி
வேண்டுபவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர். விடைக்கொடியை
உயர்த்தியவர். அப் பெருமானுக்குரிய இடம், நல்லவர், மனத்தால் இனியவர்,
வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர் செய்யும் பிழைதெரிந்து போக்கித்
தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும்.
கு-ரை:
குற்றம் இல்லார். குறைபாடு செய்பவரது பழியைத்
|