பக்கம் எண் :

1106

மற்றுநல்லார் மனத்தா
     லினியார் மறைகலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந்
     தளிக்குங்கடற் காழியே.      4
2696.







விருதிலங்குஞ் சரிதைத்
     தொழிலார் விரிசடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும்
     எந்தைக் கிடமாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர்
     ஓதப் பிழைகேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து
     தீர்க்குங்கடற் காழியே.       5
2697.



தோடிலங்குங் குழைக்காதர்
     தேவர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை
     யாளர்க் கிடமாவது


தீர்ப்பவர் நல்லார்; இனியார்; கலையெல்லாம் கற்று நல்லாரானவர் என்று
அந்தணரைக் குறித்தல் அறிக. அளிக்கும் - தலையளிசெய்யும்.

     5. பொ-ரை: வெற்றியமைந்த புராண வரலாறுகளை உடையவர்.
விரிந்த சடையினர். எருது விளங்க அதன்மேல் பொலிவோடு அமரும்
எந்தை. அவருக்குரிய இடம், பெருமை பொருந்திய வேதங்களைப்
பயில்வோர் ஓதக்கேட்டு அதிலுள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப்
பழகிய வாசனையால் கிளிக் குலங்கள் தெரிந்து தீர்க்கும் காழிப்பதியாகும்.

     கு-ரை: சரிதை-ஒழுக்கம். சீகாழியில் வேதியர்கள் வேதத்தை
ஓதுங்கால் கேட்டுணர்ந்து, முன்புற்ற கேள்வி வன்மையால், கிளியினங்கள்
அதன்கண் பிழைகளைத் திருத்தும் அற்புதம் உணர்த்தப்பட்டது.

     6. பொ-ரை: தோடும் குழையும் விளங்கும் காதினர். வேதங்களை
அருளியவர். வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து பெருமையோடு
இலங்கும் சடைமிசைக் கங்கையைச் சூடியவர். அவ்வடிகட்கு இடம் பெரிய
கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும்
செந்நெற்காடுகளை உடைய