பக்கம் எண் :

1108

தொழுதிரங்கத் துயர்தீர்த்
     துகந்தார்க் கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம
     தாருங்கடற் காழியே.       8
2700.







பூவினானும் விரிபோதின்
     மல்குந்திரு மகடனை
மேவினானும் வியந்தேத்த
     நீண்டா ரழலாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள்
     புரிந்தவ் வொருவர்க்கிடங்
காவியங்கண் மடமங்கையர்
     சேர்கடற் காழியே.         9
2701.



உடைநவின் றாருடைவிட்
     டுழல்வார் இருந்தவத்தார்
முடைநவின் றம்மொழி
     யொழித்துகந்தம் முதல்வன்னிடம்


பின் அவன் தொழுது இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய
இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும்
கடற்காழியாகும்.

     கு-ரை: முரண்-வலி, மாறுபாடு. சிரம்உரம்-தலையும் மார்பும்
உகந்தார்- உயர்ந்த சிவபிரான். கழுது-வண்டு. பேயும் ஆம். புள்-பறவை.

     9. பொ-ரை: நான்முகனும், தாமரைமலரில் வாழும் திருமகளை
மருவிய திருமாலும் வியந்து போற்ற, அழலுருவாய் நீண்டுப்பின் அதனின்
நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம், குவளை மலர்
போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும்.

     கு-ரை: விரிபோது-பூத்த தாமரைமலர். மேவினான்-விரும்பிய
திருமால். ஓவி-நீங்கி புரிந்த ஒருவர் என்னும் பெயரெச்சத் தொடரில்
வகரம் விரித்தல் விகாரம்.

     10. பொ-ரை: உடையோடும், உடையின்றியும் திரிபவரும்,
கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர்