|
மடைநவின்ற
புனற்கெண்டை
பாயும்வயல் மலிதரக்
கடைநவின்றந் நெடுமாடம்
ஓங்குங்கடற் காழியே. 10 |
2702.
|
கருகுமுந்நீர்
திரையோத
மாருங் கடற்காழியுள்
உரகமாருஞ் சடையடி
கள்தம்பா லுணர்ந்துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந்
தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி
யாடக்கெடும் வினைகளே. 11 |
திருச்சிற்றம்பலம்
சமணர்களின்
நாற்றமுடைய மொழிகளையொழித்து உகந்த முதல்வன்
இடம், கெண்டை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிறைந்த மடைகளோடு
கூடிய வயல்கள் சூழ்ந்ததும், வாயில்களை உடைய உயர்ந்த
மாடவீடுகளைக் கொண்டுள்ளதுமான காழிப்பதியாகும்.
கு-ரை:
உடைநவின்றார்-உடை செய்தார், உடுத்தார். தேரர்,
உடைவிட்டு உழன்றார்-ஆடையின்றித் திரிந்தவர்; சமணர். முடை-நாற்றம்.
11. பொ-ரை:
கரிய கடல் அலைகளின் ஓதநீர் நிறைந்த
காழிப்பதியுள், பாம்பணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின்
அருளை உணர்ந்து ஓதுதலால் புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும்
தொண்டர்கள் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப்
பாடல்களைப் பாடி ஆட அவர்களுடைய பாவங்கள் கெடும்.
கு-ரை:
உரகம்-பாம்பு. அடிகள் தம்பால்-சிவபிரானிடத்தில். விரகன்-
வல்லவன், அறிஞன்.
|