பக்கம் எண் :

1111

2704.







பாதம்விண்ணோர் பலரும்
     பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ
     டாறும் விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு
     மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி
     கேட்டுகளுங் கேதாரமே.   2
   
2705.







முந்திவந்து புரோதாய
     மூழ்கி முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின்றி
     றைஞ்சும் மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச்
     சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்தநாறக் கிளருஞ்
     சடையெந்தை கேதாரமே.   3


     2. பொ-ரை: விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு
வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும்
விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம், மலரின் மது உண்ட வண்டுகள்
கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும்.

     கு-ரை: விண்ணோர் பலரும் பாதம் பரவிப் பணிந்து ஏத்த
விர்த்தார்க்கு இடம் கேதாரம் என்க. வண்டினம் கீதம்பாட மந்திகள்
கேட்டுத் துள்ளும்.

     3. பொ-ரை: முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி
எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம்,
மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த
மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும்.

     கு-ரை: புரோதாயம்புர+உதயம் = புரோதயம், புர:- கீழ்த்திசை
உதயத்திற்கு முன்னர் எனலுமாம். ‘நீராண்ட புரோதாயம் ஆடப்
பெற்றோம்’ புரோதயம் என்பது புரோதாயம் எனப் பிழையாய் நின்றது.
சிவாலிங்கம், சடாட்சரம் ஆதினம் ஆதிபன் ஆம்பா (கண்ணாம்பா