2706.
|
உள்ளமிக்கார்
குதிரைம்
முகத்தார்
ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள்
சேரும்
மிடமென்பரால்
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ
கேட்டுப்
பிரியாதுபோய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து
வாய்ப்பெய்யுங்
கேதாரமே. 4 |
|
|
2707.
|
ஊழியூழி
யுணர்வார்கள்
வேதத்தினொண்
பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி
றைஞ்சும்
இடமென்பரால் |
ஜகதாம்பா) முதலியவற்றில்
நீண்டதுபோல உதயம்-உதாயம் என்று நீண்டது
பிழைவழக்கு. புரா+உத்+ஆயம்எனின் , (கதிரவன்) எழுமுன் என்க. தாயம்
என்பதை ணமுதல் ப்ரத்யயாந்த மாகக் கொள்ளின்முன்னர்க்கொடுத்து
என்றுரைக்க. முனிகள் பலர் இறைஞ்சும் இடம் கேதாரம். சரேல் எனச்
சொரிந்து என்றிருந்தது போலும்.
4.
பொ-ரை: தியான பலம் உடையோரும், குதிரை
முகமுடைய
கின்னரரும், ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும்
சிவபிரானை வழிபடக் கூடுமிடம், தம்குஞ்சுகள் பசியோடு தம்மை
அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து
அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும்.
கு-ரை:
உள்ளம் மிக்கார்-தியானபலம் மிகுந்தவர். குதிரை
முகத்தார்-கின்னரர் ஸ்யா திக் க்ஷரஹ்: கிம்ரூபுர த்ருட வதனோ மயூம்
என்பது (அமரகோசம் முதற்காண்டம் சுலோகம் 74) ஒருகாலர்கள்:-
கொம்பைப் பிடித்தொருக்காலர்கள் இருக்கான் மலர்தூவி (தி.7 ப.78 பா.3.)
பிரமதகணத்தவருள் ஒருவகையர் என்னும் பவிடிய புராணக்கூற்று இங்குப்
பொருந்துமோ?
5.
பொ-ரை: பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை
உணரும்
அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம், உணவு பெற
விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள்
கிடைக்கும் திருக்கேதாரமாகும்.
|