பக்கம் எண் :

1113

மேழிதாங்கி யுழுவார்கள்
     போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க
     மணிசிந்துங் கேதாரமே.       5
   
2708.







நீறுபூசி நிலத்துண்டு
     நீர்மூழ்கி நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள்
     சேரும் இடமென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா
     வின்இருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோ
     டுண்டுகளுங் கேதாரமே.       6
   
2709.



மடந்தைபாகத் தடக்கிம்
     மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க
     நின்றார்க் கிடமென்பரால்


     கு-ரை: ஊழிஊழி உணர்வார்கள். புழுதியின் மரூஉ பூழ்தி,
(பொழுது- போழ்து), கிளைக்க-கிண்ட.

     6. பொ-ரை: நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து, நிலத்திடை
உண்டு, நீண்ட மலையின்மேல் தெளிந்த சிந்தை உடையவர்களான
தாபதர்கள் வாழும் இடம், குரங்குகள் மா,பலா மரங்களில் ஏறி
அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும்.

     கு.ரை: தாபதரொழுக்கம் முதலீரடிகளில் குறிக்கப்பட்டது. தேறு
சிந்தை-தெளிந்த உள்ளம். மாமரத்தில் ஏறிப் பழங்களையும் பலா
வைக்கீறிச் சுளைகளையும் உண்டு திரிவன குரங்கினங்கள்.

     7. பொ-ரை: சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும்,
மங்கை பங்கராகியும், வேதாகமங்களை அருளியும், அடியவர்
வினைகளைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம், காற்றடிக்கப் பூத்த
வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற
புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும்.