|
உடைந்தகாற்றுக்
குயர்வேங்கை
பூத்துதிரக்கல் லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகஞ்
செய்யுங் கேதாரமே. 7 |
|
|
2710.
|
அரவமுந்நீர்
அணியிலங்கைக்
கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா
டலர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி
ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு
பண்செய்யுங் கேதாரமே. 8 |
|
|
2711.
|
ஆழ்ந்துகாணா
ருயர்ந்தெய்த
கில்லார் அலமந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய
நின்றார்க் கிடமென்பரால் |
கு-ரை:
சிவபிரான், மங்கைபங்கராகியும் வேதாகமங்களை அருளியும்
உயிர்களின் வினைகளைத் தீர்க்கின்ற உண்மை முன்னீரடிகளில்
உணர்த்தப்பட்டது. ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு,
காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லை ஆகும் என்பது சிவாகம
வசனம். காற்றடிக்கப் பூத்த வேங்கைப் பூக்கள் கற்பாறைகளின் மேல்
உதிர்ந்து கிடந்தன. வேங்கை கண்டு பிறிதொரு வேங்கை எனச் சினந்தது.
8. பொ-ரை:
கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை
மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை
ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம், குரவம், கோங்கு, அசோகு, ஞாழல்,
சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு
பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும்.
கு-ரை:
அரவம்-முழக்கம். வரை-மலை. குரவம்-குராமரம். பிண்டி-
அசோகம். கிரமம்-முறை.
9. பொ-ரை:
பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத
திருமாலும், அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும்
|