பக்கம் எண் :

1115

வீழ்ந்து செற்றுந் நிழற்கிரங்கும்
     வேழத்தின்வெண் மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண
     முத்துதிருங் கேதாரமே.       9
   
2712.







கடுக்கள்தின்று கழிமீன்
     கவர்வார்கண் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த
     வொண்ணா விடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள்
     கேட்டாங் கவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான்
     உறைகின்ற கேதாரமே.        10


தாழ்ந்துதம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய
இடம், சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து
குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும்
கேதாரமாகும்.

     கு-ரை: ஆழ்ந்துகாணார்-பன்றியுருக்கொண்டு மண் இடந்தும்
காணாத திருமால். உயர்ந்து எய்தகில்லார்-அன்னப்புள் வடிவு கொண்டு
விண்பறந்தும் காணாத அயன், தாழ்ந்து தம்தம் முடிசாய நின்றவர்
சிவபிரான். சாய்ந்தவர்- அயனும் அரியும். சிங்கம் யானை மேல் வீழ்ந்து
அழித்து மருப்பைப் பிளந்து உண்ணுகின்றுழி முத்துக்கள் உதிரும்.

     10. பொ-ரை: துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும்
அறியாமல் கவர்ந்து உண்பவரும், மாசு பொருந்திய உடலினரும்
மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத
இடம், அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு
அடியவர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும்.

     கு-ரை: கடுக்கள் தின்று-துவர்க்காய்கள் தின்று. கழிமீன்கள்
கவர்வார்கள் என்றதில் அவர் புலைமை குறிக்கப்பட்டது. இடுக்கண்-
(இடுங்குகண்) துன்பம்.