2717.
|
பூவுநநீரும்
பலியுஞ்
சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்றேத்த
லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை
யல்லால்அடி யார்கடாம்
ஓவும்நாளும் உணர்வொழிந்த
நாளென் றுள்ளங்கொள்ளவே. 4 |
2718.
|
அன்னங்கன்னிப்
பெடைபுல்கி
யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன
மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த
மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர்
ஏத்தச் சிறிதெளியரே. 5 |
கு-ரை:
தொடை-மாலை. அமருலகம்:- அமரருலகம் என்பது
இவ்வாறு ஆளப்பட்டது. வன்மை பேற்றிற்குக்காரணம்.
4. பொ-ரை:
பூவும், நீரும், நிவேதனப் பொருள்களும் எடுத்துவந்து
புகலூரை அடைந்து, அங்குள்ள பெருமானை நாவினால் நவின்று, ஏத்த
வல்லவராய், செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும் கேளாதவராய்த்
தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத
நாள்களைப் பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள்
என்றும் கருதுவர்.
கு-ரை:
பலி-நிவேதனம். ஓவார்-நீங்கார். அடியார்கள் அவன்
பெருமை அல்லால் செவித்துளைகளால் யாதும் கேளார். ஓவார், ஓவும்
நாள் உணர்வு ஒழிந்த நாள் என்க. ஓவும் நாள் உணர்வு அழியும் நாள்
(தி.7 ப.48 பா.3.)
5. பொ-ரை:
அன்னங்கள் கன்னிப் பெடைகளைத் தழுவி ஒதுங்கி
அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின்
நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில், முன் நாளில் முப்புரங்களை எரித்த
|