பக்கம் எண் :

1120

2719.







குலவராகக் குலமிலரும்
     மாகக்குணம் புகழுங்கால்
உலகினல்ல கதிபெறுவ
     ரேனும்மலர் ஊறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும்
     அந்தண்புக லூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள்
     பாதம் நினைவார்களே.    6
2720.



ஆணும்பெண்ணும் மெனநிற்ப
     ரேனும்அர வாரமாப்
பூணுமேனும் புகலூர்தனக்
     கோர்பொரு ளாயினான்


மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர் என்னப் பெரிதும்
அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர்.

     கு-ரை: புல்கி-தழுவி. ஒல்கி-ஒதுங்கி. இன்னர் என்னப்
பெரிது அரியர்- ‘அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய வொண்ணார்
(தி.6 ப.85 பா.3). ‘இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே’
(தி.6 ப.97 பா.10). 6.

     பொ-ரை: உயர் குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய
குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி பெறுவர். ஆதலின், அடியவர்கள்
மலர்களில் விளைந்த தேனால், புலால் நாறும் இடங்களிலும் மணம்
வீசுகின்ற, அழகிய புகலூரில் பிறையணிந்த சடையுடைய அடிகளின்
திருவடிகளையே நினைவார்கள்.

     கு-ரை: குலவர்-உயர் குலத்திற் பிறந்தவர். ஆக- இரண்டும்
வியங்கோள். குணம்-இறைவனுக்குள்ள எண்குணங்கள், பொருள்
சேர்புகழ்கள். நல்லகதி- ‘நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவு இலை’
(தி.3 ப.24 பா.1). புலவும்-புலால் நாற்றம் உடையவை. நிலவம் - பிறை.

     7. பொ-ரை: புகலூரைத் தமக்குரிய இடமாகக் கொண்ட இறைவர்
ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும், பாம்புகளை உடல் முழுதும்
அணிகலன்களாகப் பூண்பவரேனும், ஊரார் இடும்பிச்சையை ஏற்று
உண்பவரேனும், கோவணம் ஒன்றையே உடையாகக் கொண்டவரேனும்,
அடியவர் அவரையே பிரான் என்பர்.