பக்கம் எண் :

1121





ஊணும்ஊரார் இடுபிச்சை
     யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப
     ரால்எம்பெரு மானையே.     7
2721.







உய்யவேண்டில் எழுபோத
     நெஞ்சேயுயர் இலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரை
     யெடுத்தானை யோர்விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள
     வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர்
     புகழப் பொருளாகுமே.       8
2722.



நேமியானும் முகநான்
     குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப்
     போயாரழ லாயினான்


     கு-ரை: ஊணும் ஊரார் இடுகின்ற பிச்சையுண்டி. உடையும்
கோவணம், பிச்சையைப்பேணும் (விரும்பும்) கோவணத்தைப் பேணும்.
எம்பெருமானையே பிரான் என்பர்.

     8. பொ-ரை: நெஞ்சே! உய்தி பெற வேண்டில் எழுக, போதுக;
உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை, கைகளால் கயிலை
மலையைப் பெயர்த்தவனை ஓர் விரலால் தன் வன்மை தோன்றச்
சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய, பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப்
புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும்.

     கு-ரை: நெஞ்சே! உய்யவேண்டுவையாயின் எழு. போத:- புகுத
என்பதன் மரூஉ. ஒல்க-தளர. புகழ்ந்தால் மெய்ப்பொருள் கிட்டும்.

     9. பொ-ரை: சக்கராயுதம் உடைய திருமாலும், நான்முகனும்
இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும்