பக்கம் எண் :

1122

சாமிதாதை சரணாகு
     மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம்
     மல்கும் புகலூரையே.      9
2723.







வேர்த்தமெய்யர் உருவத்
     துடைவிட் டுழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ
     லாரும் புகலூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த
     தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது
     பாதந்தொழு துய்ம்மினே.   10


வடிவு கொண்டு தேட அழலுரு ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய
புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன் ஆவன், என்று
தலைதாழ்த்தி வணங்குமின் உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும்.

     கு-ரை: நேமியான்-சக்கிராயுதம் ஏந்திய திருமால், நான்கு
முகமுடைய நெறியண்ணல் எனமாறுக. ஆம் இது என்று தகைந்து-மேலிடம்
ஆகும் கீழிடமாகும் இ(றைவனது இ) ந்நிலை என்று கூறுபடுத்தி. சாமி
-முருகன். புகழ் செல்வம்:- வினைத்தொகை. உம்மைத் தொகையும் ஆம்.

     10. பொ-ரை: வியர்வை தோன்றிய உடலினோரும், உடலில்
உடையின்றித்திரிபவரும், ஆடையைப் போர்த்திக் கொண்டு அரசமரநிழலில்
உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து,
புகலூரில் கங்கைசூடிய பெருமான் திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து
அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன் திருவடிகளை
வணங்கி உய்மின்.

     கு-ரை: கூறை-ஆடை. போதி-அரசமரம். தீர்த்தம்-கங்கை. கரந்த-
மறைத்த. ஓர்த்து-ஆராய்ந்து.