பக்கம் எண் :

1123

2724.







புந்தியார்ந்த பெரியோர்கள்
     ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பற் பொடிப்பூச
     வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட
     லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி
     யாடக்கெடும் பாவமே.   11

                திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: அறிவார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூரில்
நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் விடையூர்த்தியனும்,,
அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய பெருமானை ஞான
சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி, ஆடிப் போற்ற, பாவம்
கெடும்.

     கு-ரை: புந்தி-அறிவு. அந்தம்-முடிவு, முடிவின்மை இறைவனுக்குரியது.
(தி.2 ப.117 பா.11). தமிழ்-இத்திருப்பதிகம் பாடி ஆடினால் பாவம் கெடும்.

    திருஞானசம்பந்தர் புராணம்

திருப்புகலூர்த்திருத் தொண்ட ரோடுஞ்
     செம்மை முருகனார் மெய்ம்ம கிழந்த
விருப்பொடு சென்றெதிர் கொள்ள வந்து
     வேத முதல்வர்தங் கோயி லெய்திப்
பொருப்புறழ் கோபுரத் துட்பு குந்து
     பூமலி முன்றில் புடைவ லங்கொண்
டொருப்படு சிந்தையொ டுள்ளணைந்தார்
     ஓதாது ஞானமெ லாம்உணர்ந்தார்.

-சேக்கிழார்.