பக்கம் எண் :

1124

116. திருநாகைக்காரோணம்

பதிக வரலாறு:

     அவயந்தியைப் பணிந்த பாலறாவாயர், திருத்தொண்டர்
குழாத்தொடும், கற்றவர் வாழ் கடல் நாகைக்காரோணத்துக் கண்ணுதலைக்
கைதொழுது பாடிய சொற்றமிழ் மாலைகளுள் ஒன்று இத்திருப்பதிகம்.

                   பண்: செவ்வழி

ப.தொ.எண்: 252                             பதிக எண்: 116

                   திருச்சிற்றம்பலம்

2725.







கூனல்திங்கட் குறுங்கண்ணி
     கான்றந்நெடு வெண்ணிலா
ஏனற்பூத்தம் மராங்கோதை
     யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் அமரர்பெரு
     மாற்கிட மாவது
கானல்வேலி கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே.    1


     1. பொ-ரை: வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை, ஒளி உமிழும்
வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர்
மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும், அமரர்
பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக்
கொண்டதும் உப்பங்கழிகளை உடையதுமாகிய கடல்நாகைக்காரோணமாகும்.

     கு-ரை: கூனல்திங்கட் குறுங்கண்ணி:- வளைந்த பிறையாகிய
சிறியதலைமாலை.

     ஏனல்-தினை. மராங்கோதை-கடம்பலர் மாலை. ‘வான நாடன்; அமரர்
பெருமான்’ (தி.3 ப.118 பா.4 ; தி.7 ப.25 பா.2; தி.81 ப.1 பா.5 தி.39 ப.3)