2728.
|
வண்டுபாட
வளர்கொன்றை
மாலைமதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை
தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத்து
கந்தவொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 4 |
2729.
|
வார்கொள்கோலம்
முலைமங்கை
நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு
வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு
கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 5 |
4. பொ-ரை:
வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர்
மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து, சுருண்ட சடையுள்
குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து, மகிழ்ந்த
இறைவனுக்கு இடம், தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும்
ஆகிய கடல் நாகைக்காரோணமாகும்.
கு.ரை:
மாலைமதி:- மாசில்வீணையும் மாலைமதியமும் கோலம் -
அழகு. சிவவேடம்.
குருள்குஞ்சி-குருண்டசடை,
குருண்டவார் குழற்சடையுடைக்குழகன்
(தி.2 ப.105 பா.11).
5. பொ-ரை:
நல்லவர் மகிழ்ந்தேத்த, கச்சணிந்த தனங்களை
உடைய உமையம்மையோடு கூடிய அழகோடு, தண்மையான அழகிய
சடையில் நீண்டநிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப்
போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டுவிளங்கும்
சிவபிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல்
நாகைக் காரோணமாகும்.
|