பக்கம் எண் :

1127

2730.







விடையதேறிவ் விடவர
     வசைத்தவ் விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட
     ஆடும்பர மரவர்
உடைகொள்வேங்கை யுரிதோ
     லுடையார்க் கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே.    6
2731.







பொய்துவாழ்வார் மனம்பாழ்
     படுக்கும் மலர்ப்பூசனை
செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே
     செலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க
     ரெம்மாற் கிடமாவது
கைதல்வேலி கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே.    7


     கு-ரை: வார்-கச்சு, நிகழ்வு-விளக்கம். கார்-மேகம். ஏத்தவும்
எய்தவும் புல்குகையார்க்கு இடம் காரோணம் என்க. ‘பரமாயவர்’
என்றும் பாடம்.

     6. பொ-ரை: விடைமீது ஏறி வருபவனும், விடம்பொருந்திய பாம்பை
இடையில்கட்டிய விகிர்தனும், பூதப்படைகள் பாட ஆடும் பரமனும்,
புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெருமானுக்குரிய இடம்,
மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும்.

     கு.ரை: விடை ஏறி நச்சுப்பாம்பை அரைக்கச்சாகக்கட்டிய விகிர்தர்.
பூதங்கள் பாட ஆடும் பரமர்.

     7. பொ-ரை: மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை
வாழ்வுடையாரும், சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப்
பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்தவாழ்வாராகிய அழகிய
பெருமானுக்கு இடம், தாழைவேலியையும் உப்பங் கழிகளையும் உடைய
கடல் நாகைக்காரோணமாகும்.