2732.
|
பத்திரட்டி
திரடோ
ளுடையான் முடிபத்திற
வத்திரட்டி விரலா
லடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண்டிரை
மல்கிய மால்கடல்
கத்திரட்டுங் கழிசூழ்
கடனாகைக் காரோணமே. 8 |
2733.
|
நல்லபோதில்
லுறைவானு
மாலுந் நடுக்கத்தினால்
அல்லராவ ரெனநின்ற
பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண்டிரை
மல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ்
கடனாகைக் காரோணமே. 9 |
கு-ரை:
பொய்து வாழ்வு-பொள்ளலுடையதாகிய வாழ்வு. ஆர்-
பொருந்திய, வாழ்வாரும் சிந்தையாரும் எய்த வாழ்வாராகிய நக்கர்.
பொய்து வாழ்வார் மனத்தைப் பாழ்படுக்கும் பூசனை என்றலும்
பொருந்தும். பூசனை செய்து வாழ்வாரும் சிவன் சேவடிக்கே செலுஞ்
சிந்தையாரும் எய்த வாழ்பவர் நக்கர். கைதல் (-தாழை) என்பது
அருஞ்சொல். கைதல் சூழ்கழிக்கானல் (தி.3 ப.66 பா.2).
8. பொ-ரை:
இருபது தோள்களை உடைய இராவணனுடைய
பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த
பெருமானுக்குரிய இடம், கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை
உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப்பும்
கடல் நாகைக்காரோணமாகும்.
கு-ரை:
பத்து இரட்டிதோள் - இருபது தோள்கள். அத்து -
சிவப்பு. மை திரட்டிவரு வெள்திரை எனப் பிரிக்க. கத்து - ஒளி.
9. பொ-ரை:
நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும்,
திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர்
|