பக்கம் எண் :

1129

2734.







உயர்ந்தபோதின் னுருவத்
     துடைவிட் டுழல்வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட
     மாவுண் டுழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற
     நாதர்க் கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே. 10
2735.



மல்குதண்பூம் புனல்வாய்ந்
     தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான
     சம்பந்தன்நல் லார்கள்முன்


எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம், வளமோங்கிவரும் வெள்ளிய
அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களையுடைய கழிகள்
சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும்.

     கு-ரை: இவர் சிவபெருமான் அல்லார் எனவும் இவரே சிவபரஞ்
சுடர் ஆவார் எனவும் ஐயுற நின்ற பெருமான். மல்லல்-வளம், கல்லல் -
(சகரர்) தோண்டுதல்.

     10. பொ-ரை: தாமரைமலர் போன்று சிவந்த கல்லாடையை
உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில்
பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல்பவரும் ஆகிய
புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாதவாறு நின்ற பெருமானுக்கு
உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும்
கடல்நாகைக் காரோணமாகும்.

     கு-ரை: சமணரும் தேரரும் இங்குக் குறிக்கப்பட்டவாறு காண்க.
கயம் - ஆழம், நீர், பெருமை. ‘பியர்ந்த’ பி.பே.

     11. பொ-ரை: நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்
பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ்
ஞானசம்பந்தர் நல்லோர்கள்முன் வல்லவாறு பாடிய காரோணத்துத்
திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர்கட்கும் கேட்பவர்கட்கும்
துன்பம் இல்லை.