|
வல்லவாறே
புனைந்தேத்துங்
காரோணத்து வண்தமிழ்
சொல்லுவார்க்கும் இவைகேட்ப
வர்க்குந்துய ரில்லையே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநாகைக்
காரோணத்தில், நல்லோர்கள் முன்னர், இத்திருப்பதிகத்தைப் பாடியருளிய
உண்மை குறிக்கப்பட்டது.
திருஞானசம்பந்தர்
புராணம்
மற்றவர்தம்
பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவுஞ் சென்றுபணிந்தேத்திப் பாடிப்
பரமர் திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.
கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை
யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப் போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர் கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
அங்ககன்றார் மூதூர் நின்றும்.
-சேக்கிழார்.
|
|