2739.
|
நஞ்சுகண்டத்
தடக்கி
நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த
பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய்
விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந்
தழகாய மாகாளமே. 4 |
2740.
|
பூசுமாசில்
பொடியான்
விடையான் பொருப்பான்மகள்
கூசவானை யுரித்தபெரு
மான்குறை வெண்மதி
ஈசனெங்கள் இறைவன்
னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண்
டணிகின்ற மாகாளமே. 5 |
கு-ரை:
பலவின்கனிகள்-பலாப்பழங்கள் பல இனிய கனிகள்
எனலும் பொருந்தும். மந்திகள் கொண்டுவந்து உண்டு திரியும் மாகாளம்.
4. பொ-ரை:
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள்
அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம்,
குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள்
தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும்.
கு-ரை:
மலையான்-இமாசலராசன். வேழம் - யானை. எஞ்சல்-
குறைதல். மஞ்சு-மேகம்.
5. பொ-ரை:
குற்றமற்ற திருநீற்றுப் பொடியைப் பூசியவனும்,
விடையூர்தியனும், மலைமகள் கூசுமாறு யானையை உரித்த பெருமானும்,
பிறைமதி சூடிய ஈசனும் ஆகிய எங்கள் இறைவனது இடம், திரு
இரும்பையில் உள்ளதும், அடியவர் மலர் கொண்டு அணிவித்து
மகிழ்வதுமாகிய திருமாகாளம் ஆகும்.
கு-ரை:
பூசும்பொடி, மாசு இல்பொடி, பொருப்பான்-இமாசல 150
|