பக்கம் எண் :

1134

2741.







குறைவதாய குளிர்திங்கள்
     சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன்
     பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான்
     இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித்
     தொழுகின்ற மாகாளமே.       6
2742.







பொங்குசெங்கண் அரவும்
     மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமானென
     நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான்
     இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
     தழகாய மாகாளமே.           7


ராசன், தேவியார் கூசுமாறு ஆனையை உரித்தான், மாசு இலோர்கள்
மும்மலமாகிய குற்றம் இல்லாத சைவமறையோர் அடியார் முதலியோர்கள்,
(தி.2 ப.6 பா.10 பார்க்க)

     6. பொ-ரை: கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய
வரும்,வினைகளை அழிக்கும் பரமரும், தூய்தான ஆறுகுணங்களை
உடையவரும், பரவலான சடைகளை உடைய இறைவரும், எங்கள்
பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள்
வழிபடும் திருமாகாளமாகும்.

     கு-ரை: குனித்தான்-கூத்தாடிய பிரான், பறைவது-அழிவது. பரமன்
முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருள். பகவன்-சாட்குண்யன்.

     7. பொ-ரை: சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித்
தங்க வைத்த பெருமானும், எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி
விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய
பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும்.