2743.
|
நட்டத்தோடு
நரியாடு
கானத்தெரி யாடுவான்
அட்டமூர்த்தி யழல்போ
லுருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும்
இடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார்
பிணிதீர்க்கும் மாகாளமே. 8 |
2744.
|
அட்டகாலன்
றனைவவ்
வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண்
டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா
னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந்
தெழிலாரும் மாகாளமே. 9 |
கு-ரை:
சடையில் பாம்பும் பிறையும் பகையின்றி வாழவைத்த
பெருமான். பொங்குசெங்கண்ணரவு என்றதால், விளங்கும் பெருங்கோபம்
சடையின்கண் தணிந்தது. தாழ்வு-எழுந்தருளுதல்.
8. பொ-ரை:
நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம்
புரிபவரும், அட்டமூர்த்தி வடிவினரும், அழல் உருவினரும் ஆகிய இறைவர்
விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம்
வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும்.
கு-ரை:
நட்டம்-திருக்கூத்து,. அட்டமூர்த்தி-எட்டுருவத்தன். மண்,
நீர், அனல், வளி விண், இருசுடர், வேள்வித்தலைவன், இட்டம் - விருப்பம்,
வட்டம் சூழ்தல்-வலம் வரல்.
9. பொ-ரை:
மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக்
கவர்ந்தவரும், இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும்
நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும், ஆகிய சிவபிரான் இட்டமாக
இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில்
சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
|