2745.
|
அரவமார்த்தன்
றனலங்கை
யேந்தி
யடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை
நின்ற
பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள்
சேரும்
இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர்
தொழுகின்ற
மாகாளமே. 10 |
2746.
|
எந்தையெம்மான்
இடம்எழில்
கொள்சோலை
யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந்
தழகாரு
மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு
வானையணி
ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட
வல்லார்பழி
போகுமே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
அட்ட - மார்க்கண்டேய முனிவரோடு போராடிய, எட்டும்
இருபத்திரண்டும் - பத்துத்தலையும் இருபது கையுமாகிய முப்பதும், மட்டு-
தேன்.
10.
பொ-ரை: பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு,
அனலை
அங்கையில் ஏந்தி, பிரமன், மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு
ஓங்கிநின்ற பெரியோன் இடம், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த
பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும்
தொழும் திருமாகாளமாகும்.
கு-ரை:
ஆர்த்து-கட்டி, அனல்-தீ. குரவம்-குராமரம். வானோரும்
மறையோரும் தொழுகின்ற தலம்.
11.
பொ-ரை: எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய
சிவபிரான்
விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள்
சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற
|