நிலையில் அனலாடும்
இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய
இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும்.
கு-ரை:
எழில்கொள்சோலை இரும்பை எனத் திருத்தலத்தையும்
பொழில்சூழ்ந்து அழகு ஆரும் மாகாளம் எனத் திருக்கோயிலையும்
குறித்ததால் அவ்விரண்டையும் சுற்றிக்கிடக்கும் சோலைவளம்
குறிக்கப்பட்டது. மந்தமாய பொழில் (தி.2 ப.117. பா.11)
திருஞானசம்பந்தபுராணம்
சுவாமிகள்
வக்க
ரைப்பெரு மான்தனை வணங்கிஅங்
கமருநாள் அருளாலே
செக்கர் வேணியார் இரும்பைமா காளமுஞ் சென்று
தாழ்ந் துடன்மீண்டு
மிக்க சீர்வளர் அதிகைவீ ரட்டமும்
மேவு வார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந் தெதிர் கொளத்
தொழுதெழுந் தகணைவுற்றார்.
-சேக்கிழார்.
|
திருக்குறுக்கைப்
புராணம்
எழுதரிய
மறைமொழிபுக் குழுதறியாச்
செவித்தொளையி னிழுதை யோராய்ப்
பழுதமையும் புறச்சமயர் கெட்டோமென்
றழப்புகலிப் பதிநீர்ப் பொய்கை
முழுதமையுங் கரைநின்றோர் மழவாகி
யழுதறியா முதலை நோக்கி
யழுதமறைக் குழவியடி தொழுதகையே
மாகிவினை யழுவந் தீர்வாம்.
|
|