பக்கம் எண் :

1140

2750.







கங்கைதிங்கள் வன்னிதுன்
     எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில்
     வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில்
     சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
     தழகார் மதிமுத்தமே.        4
2751.







புரவியேழும் மணிபூண்
     டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு
     செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு
     வேங்கைசுர புன்னைகள்
மரவமவ்வல் மலருந்
     திலதைம் மதிமுத்தமே.      5


     கு-ரை: அடல் உள் ஏறு - வெற்றியை உள்ளு (கருது) கின்ற
விடை, வலிமைக்கு ஒப்புறுத்த உள்ளுகின்ற விடையையும் ஆம். ‘ஏறு
போற்பீடுநடை’, பிலிற்றும் - கொப்புளிக்கும்.

     4. பொ-ரை: கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய
அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய
திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி,
எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த
விகிர்தனின் இடமாகும்.

     கு-ரை: திருச்சடையில் உள்ளன என்று கங்கை முதலிய ஆறு
கூறப்பட்டன. மங்குல், மேகம்.

     5. பொ-ரை: ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு,
முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள
மதிமுத்தம், மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித்தேரைச்
செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும்.