2752.
|
விண்ணர்வேதம்
விரித்தோத
வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்
செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு
சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேண
நின்றம் மதிமுத்தமே. 6 |
2753.
|
ஆறுசூடி
யடையார்புரஞ்
செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் முருவர்க்
கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்
சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில்
சூழ்ந்தம் மதிமுத்தமே. 7 |
கு-ரை:
சூரியன் கதிரில் உள்ள ஏழுநிறமும் ஏழு குதிரைகளாக
உருவகிக்கப்பட்டன. மரவம்-குங்குமமரம். சூரியன் பூசித்த தலம் என்பது
முற்பகுதியால் விளங்கும்.
6. பொ-ரை:
விண்ணுலகிலுள்ளவரும், வேதங்களை அருளியவரும்,
ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும், தம்மை எண்ணாத
திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள்
செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், தெளிந்த நிலாவொளி
வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற
வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும்.
கு-ரை:
விண்ணரும் வல்லாரும் பெண்ணரும் ஆகிய பெருமான்.
7. பொ-ரை:
கங்கையைத் தலையில் சூடியவர். திரிபுரப்
பகைவருடைய கோட்டைகளை அழித்தவர். மாதொரு கூறர்.
அவ்விறைவர்க் குரிய இடம், தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும்,
|