2754.
|
கடுத்துவந்த
கனன்மேனி
யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள்
அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை
புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந்
திலதைம் மதிமுத்தமே. 8 |
2755.
|
படங்கொணாகத்
தணையானும்
பைந்தா மரையின்மிசை
இடங்கொணால்வே தனுமேத்த
நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர்
பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு
செய்யும் மதிமுத்தமே. 9 |
அழகியதும், நீர்வற்றாத
அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய
திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும்.
கு-ரை:
பெயர். அடையார்-பகைவர். செற்றவர்-அழித்தவர்.
பொற்றொடி ‘வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. தேறல்-தேன். பொற்றொடி நாயகி என்னுந் தேவியார்
திருப்பெயரில் தொடி என்பது கொடி என்றாயிற்றோ?
8. பொ-ரை:
சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை
உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய
முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த
பாக்குமரத்தின் இளம்பாறைவழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள்
விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும்.
கு-ரை:
கனல்-தீ. பூகம்-பாக்கு மரம். மது-கள். மடுத்து-உண்டு.
9. பொ-ரை:
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன்
படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி
|