2756.
|
புத்தர்தேரர்
பொறியில்
சமணர்களும்
வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி
லாத
பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்
றிறைஞ்சுந்
திலதைப்பதி
மத்தயானை வழிபாடு
செய்யும்
மதிமுத்தமே. 10 |
2757.
|
மந்தமாரும்
பொழில்
சூழ்திலதைம்
மதிமுத்தமேற்
கந்தமாருங் கடற்காழி
யுள்ளான்
தமிழ்ஞானசம் |
வேதங்களை ஓதும் நான்முகனும்
வழிபட எழுந்தருளிய இறைவன்
இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும்
திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும்.
கு-ரை:
மடங்கல்:- இயமன், இடி, சிங்கம் என்பவற்றுள் ஒன்று
பூசித்த தலமாயிருந்தால்தான் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தம்
என்றிருக்கலாம்.
10.
பொ-ரை: புத்தர், தேரர், அறிவற்றசமணர்,
பெருமையில்லாத
பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது
இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில்
மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்.
கு-ரை:
பொறி-அறிவு. வீறு இல்லாத பித்தர். பத்தர்-அன்பர். சித்தர்-
அறிஞர். யானை வழிபட்டதலம்.
11.
பொ-ரை: தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த
திலதைப்பதியுள்
விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும்
கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப்
பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய்
அவ்வடிகளை அடைவது உறுதி.
|