பக்கம் எண் :

1144

பந்தன்மாலை பழிதீர
     நின்றேத்த வல்லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி
     சேர்வது திண்ணமே.      11

                திருச்சிற்றம்பலம்


     கு-ரை: மந்தம்-‘மந்தமாய பொழில்’ (தி.2 ப.117. பா.11). கந்தம்-மணம்,
புலால் நாற்றம். ‘பழிதீர நின்று மாலை ஏத்த’.

       திருஞானசம்பந்தர் புராணம்

ஓங்குபுனற் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கார் திலதைப் பதிமுற்ற மும்பணிந்து
வீங்கொலிநீர் வீழி மிழலையினில் மீண்டும்அணைந்(து)
ஆங்கினிது கும்பிட் டமர்ந்தொழுகும் அந்நாளில்.

-சேக்கிழார்.


        பவானிகூடற் புராணம்

பொய்கைவாய்த் திருத்தோணி புரத்தமர்ந்தா
     ரொடுஞ்சயிலப் புனிதப் பாவை
கைகளால் திருமுலைப்பால் கறந்தூட்ட
     அமுதுண்டு கடல்சூழ் வைய
முய்கவான் சைவநெறி தழைத்தோங்க
     அமணிருள்போ யொழியச் சீர்சால்
வைகைநா டீடேற அருள்பொழியும்
     கவுணியர்கோன் மலர்த்தாள் போற்றி.