பக்கம் எண் :

1147

2761.







கூசநோக்காதுமுன் சொன்ன
     பொய்கொடு வினைகுற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள்
     வந்தாடு நாகேச்சரம்
தேசமாக்குந் திருக்கோயி
     லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்குந் திறத்தார்
     அறத்தார் நெறிப்பாலரே.        4
2762.







வம்புநாறும் மலரும்மலைப்
     பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும்
     பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற
     நாகேச்சர நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச்
     சென்றுடனாவதும்உண்மையே.     5


     4. பொ-ரை: ஆராயாது பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய்,
கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம்
உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சுரத்தை ஒளிவிளங்கும்
கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர் அறநெறிப்
பாலராவர்.

     கு-ரை: கூசச்சொன்னபொய், நோக்காது சொன்னபொய். பொய்யும்
வினையும் குற்றமும் நாசம் ஆக்கும் மனத்தார்கள். ஆடுதல் -தீர்த்தமாடுதல்.
நேசம் - அன்பு. அறத்தார் - சிவ தருமமுடையவர். நெறிபாலர் -
வீட்டுநெறிக்கண் ஒழுகுபவர்.

     5. பொ-ரை: மணம் கமழும் மலர்களையும், மலைப் பொருள்களையும்
வாரிக்கொண்டு, பைம் பொன் கொழித்து வரும் நீரை யுடைய பழங்காவிரித்
தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை நண்ணுபவர்
உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர்.

     கு-ரை: உம்பரும் வானோரும், உடனாவது-அத்துவித