பக்கம் எண் :

1148

2763.







காளமேகந் நிறக்கால
     னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாமனும்
     பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற
     நாகேச்சர நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும்
     நன்காங் குறிக்கொண்மினே.   6
2764.







வேயுதிர்முத் தொடுமத்த
     யானை மருப்பும்விராய்ப்
பாய்புனல்வந் தலைக்கும்
     பழங்காவிரித் தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி
     வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி
     யென்பார் வினைவீடுமே.     7


முறுவது ஒன்றாய் வேறாய் உடனாதல். அஃது ஈண்டு ஆன்மாச்
சிவனுடனாதலை உணர்த்திற்று.

     6. பொ-ரை: கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், விலகி
நின்று கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் செற்றதை நினைந்து
நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக்
கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும். அதனை மனத்தில்
கொள்மின்.

     கு-ரை: காளம்-கருமை. காலன் அந்தகன் என்னும் இருவரும்
வெவ்வேறு ஆவர். கருடன் பட்டது:- இத்தலத்தில் ஐந்தலைப் பாம்பின்
பணிகொண்டு கருடனைச் செற்ற வரலாறு குறித்தது. அடுத்த குறிப்பிற்
காண்க. ‘மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத்தாள்’ (பெரிய .2310).
கோள்களும் நாள்களும் தீயன எனினும் நல்லன ஆகும்.

     7. பொ-ரை: மூங்கில் முத்துக்கள், யானைமருப்பு ஆகியவற்றுடன்
வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில், நாயிறு, திங்கள்
இரண்டும் வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் எழுந்தருளிய,