2765.
|
இலங்கைவேந்தன்
சிரம்பத்தி
ரட்டியெழிற்
றோள்களும்
மலங்கிவீழம் மலையால்
அடர்த்தா
னிடமல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும்
நண்ணும்
நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார்
இடராயின
மாயுமே. 8 |
2766.
|
கரியமாலும்
மயனும்
மடியும்முடி
காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான்
அமரும்இட
மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங்
கரைமேவு
நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள்
வானிற்
பிரியார்களே. 9 |
இறைவன் திருவடிகளைப்
போற்றி என வணங்குவார் வினைகள் கெடும்.
கு-ரை:
ஞாயிறு-சூரியன். சூரிய சந்திரர் வழிபட்ட தலம்.
சந்திரன்னொடு சூரியர் தாம் உடன் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலையரவின் பணிகொண்டருள் மைந்தர்போல் மணி நாகேச்சுரவரே
(தி.5 ப.52 பா.4). வீடும்-அழியும்.
8.
பொ-ரை: இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத்
தலைகள்
இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன்
இடம் ஆகிய நன்மைகெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி
வழிபடும் நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின்
இடர்கள் கெடும்.
கு-ரை:
வீழ அடர்த்தான், சிந்தைக்கு நலம் தியாகபலம், வலம் -
திருக்கோயிலைச் சூழ்தல்.
9.
பொ-ரை: கருநிறமுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி
காண
இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம்
|