பக்கம் எண் :

1150

2767.







தட்டிடுக்கி யுறிதூக்கி
     யகையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும்
     வெள்ளி லங்காட்டிடை
நட்டிருட்கண் நடமாடிய
     நாதன் நாகேச்சுரம்
மட்டிருக்கும் மலரிட்
     டடிவீழ்வது வாய்மையே.           10
2768.



கந்தநாறும் புனற்காவிரித்
     தென்கரைக் கண்ணுதல்
நந்திசேருந் திருநாகேச்
     சரத்தின் மேன்ஞானசம்


ஆகிய, பெருகிவரும் காவிரி நீர் வந்தலைக்கும் தென் கரையில் அமைந்த
நாகேச்சுரத்தைப் பிரிவிலாத அடியவர் சிவலோகத்தைப் பிரியார்.

     கு-ரை: காண்பு-காட்சிக்கு, காவிரியினீர் கரையை அலைக்கும்
நாகேச்சுரத்தைப் பிரியாதவர் சிவலோகத்தைப் பிரியார்.

     10. பொ-ரை: தட்டைக் கக்கத்தில் இடுக்கி உறிதூக்கிய
கையினராய்த்திரியும் சமணர், சாக்கியர், புனைந்து சொல்லும் மொழிகளைக்
கொள்ளாது, இடுகாட்டில் நள்ளிருளில் நடனமாடும் நாகேச்சுரத்து
இறைவனைத் தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்குவது
உண்மைப் பயனைத்தரும்.

     கு-ரை: கட்டுரைக்கும் மொழிகொள்ளலும்-கட்டிச் சொல்லும்
சொற்களைக் கொள்ளதேயுங்கள். கொள்ளல் என்னும் முன்னிலை
ஒருமை ஏவல் வினையுடன் உம்மை சேர்த்துப் பன்மையே
வல்வினையாக்கியவாறுணர்க. வெள்ளில் - பிணப்பாடை. நடு
இருள் = நட்டிருள்.

     11. பொ-ரை: மணம் கமழும் நீரை உடைய காவிரித் தென் கரையில்,
கண்ணுதற் கடவுளாகிய நந்தி எழுந்தருளிய திருநாகேச்சுரத்தின் மேல்
ஞானசம்பந்தன் நாவினால் போற்றிய இப்பனுவல்