பக்கம் எண் :

1151

பந்தனாவிற் பனுவல்
     லிவைபத்தும் வல்லார்கள்போய்
எந்தையீசன் இருக்கும்
     உலகெய்த வல்லார்களே.
          11


                    திருச்சிற்றம்பலம்


பத்தையும் வல்லவர் மறுமையில் எந்தையீசன் இருக்கும் சிவலோகம்
எய்துவர்.

     கு-ரை: கந்தம் - மணம். கண்ணுதல் நந்தி - சிவபிரான். உலகு-
சிவலோகம்.

                 திருஞானசம்பந்தர் புராணம்

திருநாகேச் சரத்தமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைக்
     கருநாகத் துரிபுனைந்த கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து
     பெருஞான சம்பந்தர் பெருகார்வத் தின்புற்றார்.
மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி
     நாணாளும் பரவுவார் பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர் பரமர்திரு விடைமருதில்
     பூநாறும் புனற்பொன்னித் தடங்கரைபோய்ப் புகுகின்றார்.

                                     -சேக்கிழார்.