பக்கம் எண் :

22

     உதாரணமாக, நல்லான், வல்லான் என்பன நன்மையுடையான்,
வன்மையுடையான் என்ற பொருளே தரும். மாறான பொருள் தராது.

     சொல்லான் என்பதற்குச் ‘சொல்லை உடையவன்’ என்றும் பொருள்
கொள்ளலாம். ‘சொல்லாதவன்’ என்றும் பொருள் கொள்ளலாம்.

     அதுபோலவே இல்லான் என்பதற்கும் இருபொருளும் கொள்ள இடம்
தருகிறது. இந்த ஐயத்தை நீக்குதற்குக் “கோயிலாம் இல்லானை ஏத்த
நின்றார்க்குளதின்பமே” என்று எளிமையாகவும் இனிமை யாகவும்
இயம்பியுள்ளார். இதனால், இல்லான் என்றால் இல்லாதவன் என்ற
பொருளும், இல்லத்தை உடையவன் என்ற பொருளும் உண்டு என்பதை
உணரலாம்.

     அதுபோலவே இல்லாள் என்றால் இல்லாதவள் என்ற பொருளும்,
இல்லத்தை ஆள்பவள் என்ற பொருளும் உண்டு. இல்லத்தை உடையவன்
இல்லான். அவ்வில்லத்தை ஆட்சி செய்பவள் இல்லாள். இதற்கு நாட்டு
நடப்பில் உதாரணம் சொல்ல வேண்டுமாயின், நாட்டையுடையவர் ஜனாதிபதி,
நாட்டை ஆள்பவர் பிரதமர் என்று சொல்லலாம்.  இவ்வளவு
கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பாடலைக் காண்போம்.

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பால்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதின் காழியே கோயிலாம்
இல்லானை ஏத்தநின் றார்க்குள தின்பமே

                               (தி.2 ப.11 பா.1)

என்தலை மேலாரே:

     திருக்கோயில் பழுதுற்ற காலத்து அதனைப் பாதுகாத்துப் புதுக்குவார்
திருவடி என்தலை மேலன என்று திருக்கோயிலைக் கட்டியவர்கள் அதன்
அருமைப் பாட்டை உணர்ந்து எழுதியுள்ளவை கல்வெட்டில்
காணப்படுகின்றன.

     அதே போல் கட்டிய கோயிலில் உள்ள இறைவன் திருமேனிகளை
உணர்ந்து வழிபடுவோர் திருவடிகள் என் தலை மேலன