என்று நமது சமயசாரியர்கள்
குறிப்பிட்டுள்ளமை நாம் எல்லோரும் அறிந்து
மேற்கொள்ளத் தக்கனவாயுள்ளன.
கட்டிடத்தைக்
கட்டிய அருமைப் பாடுடையார் கட்டிடத்தைப்
புதுப்பித்தோர் அடிகள் என் முடி மேல என்றார்கள். கட்டிடத்தில் உயிராக
விளங்கும் இறைவனை வழிபடுவோர் திருவடி என் தலைமேலன என்றார்கள்,
திருவுருவத்தின் அருமை உணர்ந்த ஆசாரிய மூர்த்திகள்.
திருக்கச்சி
ஏகம்பத் திறைவனைப் பாடிய ஞானசம்பந்தர் முழுமையான
தூயவன் என்றால் அது இறைவனையே குறிக்கும். அவனால் ஓதப்பட்ட
மறையும் தூயதே, அதை ஓதிய வாயும் தூய்மையானதே. அத்தூய வேதத்தில்
துட்டநிக்ரகம், சி்ஷ்ட பரிபாலனம் சொல்லப்பட்டுள்ளது.
எனவே தூயவனாகிய
இறைவன் தீயவனாகிய இராவணனை வாட்டிய
தீயவன் என்கிறார். இறைவனைத் தீயவன் என்று எண்ணிவிடக் கூடாது
என்பதற்காகவே உடனே அடுத்த சொல்லில் தீதில் கச்சித் திருஏகம்பம்
மேயானை என்கிறார். அவனை மேவுவார் ( மேவுதல் - பொருந்துதல் )
என் தலை மேலார் என்று நிறைவு செய்கிறார். அவ்வரிய பாடலைக்
காண்போம்.
தூயானைத்
தூயவா யம்மறை ஓதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு ஏகம்பம்
மேயானை மேவுவார் என்தலை மேலாரே.
(தி.
2 ப. 12 பா.8) |
இதே
கருத்தை அப்பர் சுவாமிகளும் குறிப்பது கண்டு நாமும்
அவ்வழி நடப்போம். அப்பர் திருவலஞ்சுழித் திருக்கோயிலுக்குச் சென்று
வழிபடுகிறார். அப்பரும் இலங்கை வேந்தனுக்கு மறக்கருணை செய்த
வரலாற்றையே குறிப்பிட்டு இக்கருத்தைப் புலப்படுத்துகிறார்.
இராவணனின் இருபது
தோள்களும் இற்றுப்போம் படியாக இறைவன்
ஒருவிரல் ஊன்றினான். ஊன்றிய பாதம் நலங்கொள் பாதம் ஆதலால்
அவன் அழியவில்லை, அருள் பெற்றான்; நாளொடு வாளும் பெற்றான்
அல்லவா?
மலங்கு மீன்
என்ற ஒருவகை மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த
திருவலஞ் சுழியை எவரொருவர் வலஞ் செய்து வழிபடுகின்றாரோ
|