உதாரணத்திற்கு
ஒரு வரலாறு குறிப்போம், பிரமன் சிவபிரானுக்கு
உள்ளதுபோல் தமக்கும்தலை ஐந்தாக உள்ளமைபற்றிச் செருக்குற்றார்.
அஃதுணர்ந்த சிவன் அப்பிரமனது உச்சந்தலையைக் கிள்ளி அதில்
பலிகொண்டார். இது ஆலங்குடி என வழங்கும் திருஇரும்பூளைத்
திருப்பதிகத்தில் குறிக்கப்பட்டுள்ளமை காண்க.
நச்சித்
தொழுவீர் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
இச்சித் திரும்பூளை இடங்கொண்ட ஈசன்
உச்சித் தலையில் பலிகொண்டுழல் ஊணே
(தி.
2 ப. 36 பா. 4) |
புள்ளிருக்குவேளூர்ப்
பதிகம்:
வைத்தீசுவரன்
கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பவரோக
வைத்தியநாதப் பெருமான் என்ற திருப்பெயர் உடையவர். இவர் உடற்
பிணியை மட்டுமின்றி உயிர்ப் பிணியாகிய பிறவிப்பிணியையும் நீக்கி
அருளுபவர். பவம்-பிறப்பு. ரோகம்-நோய்.
அப்பர்
சுவாமிகள் தமது திருத்தாண்டகத்தில், தீரா நோய்
தீர்த்தருள் வல்லான்...............என்று இக்கருத்தைக் குறிக்கிறார். ஈண்டுத்
தீரா நோய் என்பது பிறவியைக் குறிக்கும். இதனால் இப்பெருமானைப்
பவரோக வைத்தியநாதர் எனப் போற்றுவர்.
அருணகிரிநாதர்,
பவரோக வைத்தியநாதப் பெருமாளே என்று
முருகனை வைத்தியநாதப் பெருமானாகப் போற்றியுள்ளார்.
இத்தலத்துத்
திருப்பதிகம் இவ்விரண்டாம் திருமுறையில் இடம்
பெற்றுள்ளது. கள்ளார்ந்த பூங்கொன்றை.... என்று தொடங்கும் பதிகம்
அது.
இத்தலத்திற்குரிய
பெயர் புள்ளிருக்கு வேளூர் என்பதாம். புள் +
இருக்கு + வேள் + ஊர் என்று பிரித்து இதற்குப் பொருள் காணலாம்.
புள் என்பது சம்பாதி, சடாயு என்னும் பறவை அரசர்களையும், இருக்கு
என்பது வேதத்தையும் வேள் என்பது முருகனையும், ஊர் என்பது
ஊர்ந்து செல்லுகின்ற சூரியனையும் குறிக்கும். இவை நான்கும் இங்குப்
பூசித்தன ஆதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது. இக்குறிப்பினுள் முன்
இரண்டு செய்திகளைத் திருஞானசம்பந்தர்
|