இத்தலப்பதிகத்தில்
குறிக்கின்றார்.
சீதையைக் கவர்ந்து
சென்ற இராவணனோடு போரிட்ட
சடாயுவோடு, சம்பாதி என்னும் பறவை அரசும் பூசித்த தலம் இது
என்பதனை, கள்ளார்ந்த பூங்கொன்றை.......என்னும் திருப்பதிகப்
பாடல்களில்,
தள்ளாய
சம்பாதி சடாயென்பார் தாம் இருவர்
புள்ளானார்க்கு அரையனிடம் புள்ளிருக்கு வேளூரே
(தி. 2 ப. 43 பா.1) |
யோசனைபோய்ப்
பூக்கொணர்ந்துஅங்கு ஒருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே
(தி. 2 ப. 43. பா. 3) |
என்று குறிக்கின்றார்.
இருக்குவேதம் பூஜித்தது என்னும் கருத்தினை,
வேதத்தின்
மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே
(தி. 2 ப. 43 பா. 5) |
என்று இயம்புகிறார்.
சடாயு என்னும் பறவை இராவணனோடு போரிட்டது
என்னும் இராமாயண வரலாற்றுக் குறிப்பினை, இப்பதிகத்தின் இரண்டாவது
பாடலில்,
மெய்
சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே
(தி. 2 ப. 43 பா. 2) |
என்று குறிக்கிறார்.
இப்பெருமான் பண்ணிசை பாடுவோர்க்கு மண்ணுலக
வாழ்வோடு விண்ணுலக வாழ்வும். வழங்குபவன் என்பதனை, 8-ஆவது
பாடலில்,
பண்ணொன்ற
இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்
(தி. 2 ப. 43 பா. 8) |
என்றும், 11-ஆவது பாடலில்,
|